search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா முன்னாள் பொதுச்செயலாளர்"

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி அடக்கம் செய்யப்படும் என கானா அதிபர் தெரிவித்துள்ளார். #KofiAnnan #RIPKofiAnnan
    அக்ரா:

    ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.

    2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்துகொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18-ம் தேதி தனது 80-ம் வயதில் கோபி அன்னான் காலமானார்.

    தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு அதிபர் நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார். #KofiAnnan #RIPKofiAnnan 
    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார். #KofiAnnan #RIPKofiAnnan
    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.

    "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.


    பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  #KofiAnnan #RIPKofiAnnan 
    ×